இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்து இருப்பதாக லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 40 முதல் 64 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் மதுப்பழக்கம் இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவிலேயே அருணாச்சலப் பிரதேசம் தான் மது அருந்துவதில் முதலிடத்தில் உள்ளது.