
பேராவூரணி அருகே சத்துணவு மைய சமையல் கூட அடிக்கல் நாட்டு விழா
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு. கி. முத்துமாணிக்கம், பிடிஓக்கள் சடையப்பன், நாகேந்திரன், ஒன்றியப் பொறியாளர் மணிமேகலை, கிராமத்தினர் கலந்து கொண்டனர். முதல்வர் மருந்தகம் சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், காணொலிக்காட்சி மூலம் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பேராவூரணி நகரில், சேதுசாலை, முதன்மைச் சாலை, ஆவணம் சாலை மற்றும் கொண்டிக்குளம் ஆகிய இடங்களில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்வுகளில், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் சுப. சேகர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பா. ராமநாதன், கோ. இளங்கோவன், திமுக நகரச் செயலாளர் என். எஸ். சேகர், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அலிவலம் அ. மூர்த்தி, மகளிர் அணி மாவட்டத் தலைவர் தீபலட்சுமி, கொண்டிகுளம் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.