திருபுவனத்தில் அமைச்சர் கோவி செழியன் பேச்சு
திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான 69 வது பொதுப்பேரவைக் கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. சங்க இணை இயக்குநர் கிரிதரன் தலைமை வகித்தார், உதவி இயக்குநர் காமராஜ் முன்னிலை வகித்தார். மேலாளர் எஸ். சீனிவாசன் வரவேற்று பேசினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சங்க உறுப்பினர்களுக்கு குறைத்த போனஸ் தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக கைத்தறி துறை அமைச்சருடன் பேசி சென்ற ஆண்டில் வழங்கப்பட்ட போனஸ் ரூ. 1-க்கு 0. 3868 பைசாவைவிட விட அதிகமாக ரூ. 1-க்கு 0. 4060 பைசா போனஸாகவும் டிவிடெண்ட் 14 சதவீதம் எனவும் அறிவித்து போனஸ் மற்றும் டிவிடெண்டிற்கான கூடுதல் தொகை ரூ. 4. 96 கோடியை அங்கத்தினர்களுக்கு போனஸாக வழங்கினார். மேலும் இவ்விழாவில் முன்னாள் எம்பி ராமலிங்கம், குடந்தை மாநகர துணை மேயர் சுப. தமிழழகன், திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் சுந்தர ஜெயபால், ஒன்றியக்குழுத் தலைவர் சுபா திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலாளர் எம். கார்த்திகேயன் நன்றி கூறினார்