தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை.. 55 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை.. 55 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையால் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: எஸ்பி ஆசிஷ், ராவத் உத்தரவின்படி குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் கழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் கடந்த 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை 5 நாட்களில் சட்டத்துக்கு புறம்பாக போதைப்பொருட்களை (கஞ்சா) விற்பனைக்கு வைத்திருந்ததற்காக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களை புகார் தெரிவிக்க காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட "உரக்கச்சொல்" என்ற செயலி மூலம் பொதுமக்கள் பலரும் சட்டவிரோத செயல்களை புகாராக தெரிவித்து வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் புகார் தெரிவிக்க தங்களுடைய சுய விபரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా