தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூர்: திருடுபோன 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: திருடுபோன 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல் போன 100 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, பெரிய கோயில் உள்பட மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் காணாமல் போன கைப்பேசிகளைக் கண்டுபிடித்து தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. சோமசுந்தரம் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் எம். கலைவாணி தலைமையில், உதவி ஆய்வாளர் சம்பந்தம் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஐ. எம். இ. ஐ. எண் மூலம் திருட்டு மற்றும் காணாமல் போன கைப்பேசிகளை தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தனி நபர்கள் பயன்பாட்டில் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 100 கைப்பேசிகளை காவல் துறையினர் மீட்டனர். இவற்றை உரியவர்களிடம் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా