கும்பகோணத்தில் இரு நாட்களுக்கு குடிதண்ணீர் நிறுத்தம்
கும்பகோணம் மாநகரப் பகுதிகளில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு வருகிற குடிநீர் பிரதானக் குழாய் கசிவு சரிசெய்யும் பணி நடைபெற உள்ளதால் வருகிற 22 மற்றும் 23: 10. 2024 இரு தினங்கள் மாநகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். பொது மக்கள் தங்களது பயன்பாட்டிற்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.