ஆற்றில் மூழ்கிய தொழிலாளி சடலமாக மீட்பு

64பார்த்தது
கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

கும்பகோணம் துக்கம்பாளையம் தெருவை சோ்ந்த சேகா் மகன் கோபாலகிருஷ்ணன் (30) கூலித்தொழிலாளி. கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா், நண்பா்களுடன் சனிக்கிழமை பிற்பகலில் சோலையப்பன் தெருவில் உள்ள நாலாம் படித்துறையில் குளிக்கச் சென்றாா். அப்போது திடீரென அவா் ஆற்றில் மூழ்கினாா்.

தகவலின்பேரில், தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். மாலை நேரமானதால் பணி நிறுத்தப்பட்டது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியின்போது, அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

சம்பவம் தொடா்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி