கும்பகோணம், சாரங்க பாணி கோயில் தெற்கு வீதியில் சுமாா் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தெற்கு வீதி மற்றும் கீழவீதி சந்திக்கும் பகுதியில் தற்போது மழை நீா் தேங்கியுள்ளது. இந்த நீா் மாநகராட்சி குடிநீருடன் கலந்துச் செல்வதால் பொதுமக்கள் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சாரங்கபாணி தெற்கு வீதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற கும்பகோணம் வட்டாட்சியா் சண்முகம், துணை மேயா் சு. ப. தமிழழகன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.