நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமன் என்பவரை மரத்திருட்டு நபர் தாக்கியது தொடர்பாகவும், தாக்கிய நபர் மீது கைது நடவடிக்கையில் தாமதம் தொடர்பானதை கண்டித்து கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் அலெக்ஸ்பாண்டியன், சசிகுமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் தியாகராஜன், வட்ட தலைவர் சுரேந்திரகுமார், வட்ட செயலாளர் தியாகராஜன், வட்ட பொருளாளர் கார்த்திக்குமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அருண்குமார், வினோத், மாரியப்பன், ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.