முதலுதவி என்றால் என்ன.? அதன் முக்கியத்துவம் என்ன.?
முதலுதவி என்பது பொதுவாக உடல் ரீதியாக காயமடைந்த அல்லது மனரீதியாக நிலையற்ற ஒருவருக்கு அளிக்கக்கூடிய ‘முதன்மை மருத்துவ உதவி’ என வரையறுக்கப்படுகிறது. மருத்துவரின் உதவி இல்லாமல் சிறிய நிலைமைகளை மேம்படுத்த முதலுதவி உதவுகிறது. இருப்பினும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து, அவர் மேம்பட்ட உதவியை பெறும் வரை முதலுதவி தொடர வேண்டும். முதலுதவி செய்வதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.