சிவகங்கை - Sivaganga

சிவகங்கை அரசு பணி போட்டி தேர்விற்கான பயிற்சி மைய திறப்பு விழா

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே சீகூரணியில் "செம்மண் முற்றம்" எனும் அரசு பணி போட்டி தேர்விற்கான பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. இந்த பயிற்சி மையத்திற்கான 2 ஏக்கர் நிலத்தையும், ரூ 1. 5 கோடி மதிப்பிலான அரங்கம் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்கிய மார்ட்டின் குழுமம் சார்பாக டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பயிற்சி மையத்தினை திறந்து வைத்தார். இங்கு அரசு பணிகளுக்கான போட்டி தேர்விற்கான பயிற்சியும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான மென்திறன் பயிற்சிகளும், புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து தொழில் சார்ந்த பயிற்சி வழங்கபட உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஆயர் லூர்து ஆனந்தம் பேசுகையில், பள்ளி, கல்லூரிகளில் படிப்பை மட்டுமே போதிப்பதாகவும், மாணவர்களுக்கு செல்போன் இன்டர்நெட் போன்ற சமூக வலைதளங்களால் திறன் பயிற்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். திறனுடன் கூடிய கல்வியறிவே சிறந்தது எனக் கூறியவர், மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்திற்கு பாராட்ட தெரிவித்தவர் மாணவர்கள், போட்டியாளர்கள், தொழில் முனைவோர் இந்த பயிற்சி மையத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வீடியோஸ்


சிவகங்கை