சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா காப்பு கட்டுதளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவில் ஒரு நிகழ்வாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது முன்னதாக மூலவர் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானை தேவியர்களுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் சந்தனம் பஞ்சாமிர்தம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண தெய்வங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று வெள்ளி கவசம் அணிவித்து வண்ண மலர் மாதத்தில் கொண்டு அலங்காரம் நடைபெற்றது பின்னர் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க அலங்கார தீபம் நாக தீபம் கும்ப தீபம் ஐந்து முகம் உள்ளிட்ட பல்வேறு தீப ஆராதனைகள் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக சண்முக தீபங்கள் கொண்ட பஞ்சமுக தீபங்கள் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.