சிவகங்கை: அடகு கடை உரிமையாளர் வீட்டில் திருடிய மூன்று நபர்கள் கைது
சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் சசிவர்ண விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி, இவர் மதுரையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இதனால் ஒக்கூரில் உள்ள இவரது வீடு பூட்டி இருக்கும் தங்கமணி அடிக்கடி ஒக்கூரில் உள்ள வீட்டிற்கு சென்று வருவார். கடந்த10. ம்தேதியன்று அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ6 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர் இது தொடர்பாக மதகுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், உத்தரவின் பேரில், சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் அமலா அட்வின், மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது இந்ததனிப்படையினர் விரல் ரேகை மற்றும் CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நான்கு பேர்களைக் கொண்ட கும்பல் ஒன்று இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் செம்பனூரை சேர்ந்த. சார்லஸ் (எ) ஜேசுஅருள்(38)மேட்டுப்பாளையம்சிக்காதம்பாளையம் கிராமத்தை சேர்ந்த. லெட்சுமணன்(35), , மற்றும் நாமக்கல் மாவட்டம்அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 3. மாதேஸ்வரன் (37 கைது செய்தனர் அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் எதிரிகளிடமிருந்து 09 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூபாய் 02 லட்சத்தை பறிமுதல்செய்துள்ளனர்.