சிவகங்கை: மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரம்
சிவகங்கை அருகே திருமலை ஊராட்சி கள்ளராதினிபட்டி வெள்ளை மலை கீழ் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் சிவகங்கை வன கோட்டம், வன விரிவாக்க சரகம் சார்பில் நகர்புற பசுமை திட்டத்தின் கீழ் 500 தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்து தரப்பட்டது. வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மரக்கன்றுகளை நடவு செய்தார். பின்னர் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் மற்றும் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதே பகுதியில் உள்ள சமுதாய கிணற்றில் உள்ள நீரினை பயன்படுத்தி இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் செலுத்த ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.