சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நடைபெறவுள்ளதாக தகவல்

64பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 01. 01. 2025ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம்/முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 16. 11. 2024 (சனிக்கிழமை), 17. 11. 2024 (ஞாயிற்றுக்கிழமை), 23. 11. 2024 (சனிக்கிழமை), 24. 11. 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக நேரடியாகவோ அல்லது https: //elections. tn. gov. in என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது Voters Helpline செயலிp/https: //voters. eci. gov. in மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 28. 11. 2024 வரை சிவகங்கை/தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக்கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம்/முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி