சிவகங்கை: ஆசிரியர் கழக தலைவர் மாயவன் பேட்டி

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தேரடி திடல் பகுதியில் தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் மாயவன் செய்தியாளர்களை சந்திக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழக முதல்வர் கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்துகிறார் என பேட்டியளித்துள்ளார்.
காளையார்கோவிலில் உள்ள தனியார் மஹாலில் தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அதன் நிறுவன தலைவர் மாயவன், மாநில தலைவர் சேது செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வாக்குறுதிகளாக அறிவித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் 43 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி