சிவகங்கை - Sivaganga

கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள பாப்பாகுடியைச் சேர்ந்தவர் காளையார்(55) கூலி தொழிலாளி. இவருக்கு 3 பெண், 1 ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இலுப்பக்குடியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பொழுது அவரது மகன் வாகனம் நிறுத்துப் போது இரு தரப்பினருக்கிடையே தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூவந்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாம் அந்த புகாரை சரிவர போலீஸார் விசாரிக்கவில்லையாம். இதனால் முன் விரோதம் இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் காளையாரை மர்ம கும்பல் இன்று கழுத்தை அறுத்து கொலை செய்தது. இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கொலை செய்யப்பட்ட காளையாரின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காளையாரை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்தால் தான் அவரது உடலை வாங்குவோம் என்று கூறி சிவகங்கை மானாமதுரை இளையான்குடி சாலையில்உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

வீடியோஸ்


சிவகங்கை
Sep 18, 2024, 17:09 IST/காரைக்குடி
காரைக்குடி

ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

Sep 18, 2024, 17:09 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே முத்துபட்டணத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள மீனாட்சிபுரம், ஜீவா நகர், அண்ணாநகர், சேர்வார் ஊரணி, காட்டுதலைவாசல் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து சென்றனர். அது போல் அப்பகுதி மக்களுக்கு பொது சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நீண்ட தூரம் உள்ள பெரியார் சிலை பகுதிக்கு மாற்றியதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதாக கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் ஒருவர் கர்ப்பிணிப் பெண் போல் வேடம் அணிந்தும் முதியவர்கள் தலையிலும், கைகளில் கட்டு போட்டுக் கொண்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.