Nov 08, 2024, 17:11 IST/சிவகங்கை
சிவகங்கை
சிவகங்கை: ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Nov 08, 2024, 17:11 IST
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(நவம்பர் 8) ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சிதுதலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சிதுதலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குரிய பலன்கள் எவ்வித காலதாமதமின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, ஓய்வூதியதாரர்களுக்கான அரசின் திட்டங்கள் உரியகாலத்தில் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்திடவும், ஓய்வூதியதாரர்கள் முன்வைக்கும் கோரிக்கையான காப்பீட்டுத்திட்ட அட்டையினை காலதாமதமின்றி கிடைத்திட மருத்துவத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவும், அதேபோல், மருத்துவ சிகிச்சைக்கான கட்டண நிலுவைத்தொகை பெறுவது காலதாமதமின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ளவும், மேலும் ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கச் செய்திடல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் துறைசார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு, அரசின் திட்டங்களின் பயன்களை ஓய்வூதியதாரர்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.