இராமநாதபுரம் மாவட்டம் நீர்குன்றம் கிராமத்திற்கு இன்று 28ம்தேதி திங்கள்கிழமை காலை 6மணிக்கு செங்கல் ஏற்றிய லாரி சென்றது. காரைக்குடியில் இருந்து வந்த லாரியில் தேவகோட்டை பனிபுலான்வயலைச் சேர்ந்த இளையராஜா (35)
அமலராஜ் (43, )பாலமுருகன் (37) என மூன்று ஆண்களும்
பிலவேந்திரன் மனைவி செல்வி (45)
சாரங்கன் மனைவி
செல்வி (37)
என இரண்டு பெண்களும் லோடு இறக்குவதற்காக லாரியில் செங்கல் மீது அமர்ந்து வந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி அருகே சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. அதில் லாரி பாரம் தாங்காது கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த கூலித்தொழிலாளர்கள் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்காயமடைந்தவர்கள் உடனடியாக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இளையராஜா, அமலராஜா இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற மூவரும் தேவகோட்டையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.