சிவகங்கை: கஞ்சா வைத்திருந்த இளைஞர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிறுவாச்சி பேருந்து நிறுத்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தேரலாப்பூர் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்ற (வயது 24) இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.