சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் போக்குவரத்து நகர் இரண்டாவது வீதியில் வசிப்பவர் முருகேசன் (56). தனியார் கோனாபட்டில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் முருகேசனுக்கு உடல் குறைவு ஏற்ப்பட்டுள்ளது. குடும்பத்துடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிக் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று அருகில் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அவர்கள் வீட்டில் வளர்க்கும் கோழிக்கு தீவனம் அளிக்க சென்ற பொழுது வீட்டில் உள்ள பீரோக்கள் அனைத்தும் திறந்து கிடந்துள்ளதாகவும் வீட்டை பூட்டி இருந்த பூட்டு தூக்கி எறியப்பட்டு மின் வயரில் மாட்டி கிடப்பதாகவும் காம்பவுண்ட் கேட் உடைக்கப்பட்டு க்ரில் கேட்டையும் உடைந்து கிடைப்பதை பார்த்துள்ளார் முருகேசன் இரு மகள்களும் வெளி நாட்டில் வசிப்பதால் வீட்டில் யாரும் இல்லாததை கண்காணித்து திருட்டு சம்பவம் நடைப்பெற்று இருப்பதாக தெரிகிறது வீட்டில் இருந்த ஒரு தங்க செயின் மோதிரம் மொத்தம் ஐந்து பவுன் நகைகள் சில வெள்ளிப் பொருள்கள் திருடுபோய் உள்ளது தெரியவந்துள்ளது குன்றக்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.