சேலம்: ரயிலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று (ஞாயிறு) ஏத்தாப்பூர் அரசு பள்ளியில் படித்து வரும் பதினொன்றாம் வகுப்பு இரண்டு மாணவர்கள் புத்திர கவுண்டன் பாளையம் பகுதியில் விடுமுறை என்பதால் விளையாடச் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக ரயில்வே டிராக்கில் நின்றுகொண்டிருந்தபோது படம் எடுத்ததாகவும் எதிரே வந்த சேலம் விருத்தாச்சலம் விரைவு ரயில் வருவதை அறியாத நண்பர்கள் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் தினேஷ் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது நண்பரான ரவிக்குமார் மகன் அரவிந்த் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். இரண்டு அரசு பள்ளி மாணவர்கள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.