இடியுடன் ௯டிய கனமழை

75பார்த்தது
ஆத்தூர் (சேலம் மாவட்டம்)

ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல்
இருந்த நிலையில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.



அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மலை ஓய்ந்த நிலையில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது ஆத்தூர் நகரம், நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், கொத்தாம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி