தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயிலில் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் சேலம் மண்டலத்தில் பேளூர், நங்கவள்ளி, தர்மபுரி, குமாரசாமிபேட்டை ஆகிய பகுதிகளில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் 35 திருமணங்கள் நடைபெற்றது.
அந்த வகையில் பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி மலையரசன் தலைமையில் எட்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். கோவில் செயல் அலுவலர் கஸ்தூரி, சரக ஆய்வாளர் சங்கர், மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, பேளூர் நகர செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு தமிழக அரசு வழங்கிய 28 பொருட்கள் அடங்கிய கட்டில், மெத்தை, பீரோ , மிக்சி, சில்வர் பாத்திரங்கள், வாட்ச் உள்ளிட்ட 6000 ரூபாய் மதிப்புத்தக்க பொருள்களை வழங்கி எம்பி அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.