சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டன்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் குமார் மகன் தினேஷ் மற்றும் ரவிக்குமார் மகன் அரவிந்த் ஆகிய இரண்டு பேரும் ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இரண்டு நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இரண்டு பேரும் வெளியே சென்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு செல்வதற்காக புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக சேலத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி சென்ற பயணிகள் ரயிலில் பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் குமார் மகன் தினேஷ் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவனான ரவிக்குமார் மகன் அரவிந்த் பலத்த காயம்யடைந்த நிலையில் உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.