சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் திருமலை நகர் பகுதியில் 100 க்கும். மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற இந்நிலையில் இன்று பிறந்து சிலமணி நேரங்கள் ஆன ஆண் குழந்தை சாலையின் நடுவே கிடந்துள்ளது இந்நிலையில் அவளியாகச் சென்ற பொதுமக்கள் குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் மேலும் குழந்தை மீது எறும்புகள் மேய்ந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாழப்பாடி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு வாழப்பாடி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிளாஸ்டிக் கேரிபேக்கில் கொண்டு வந்து குழந்தையை வீசிச்சென்றது யார்? என்று வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.