சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம் இதில் சேலம் புறநகர் பகுதி மற்றும் பெரம்பலூர், ஆத்தூர் கள்ளக்குறிச்சி நாமக்கல், ராசிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு கோழி உள்ளிட்டவைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம் இதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகை ஒட்டி ரெண்டாயிரத்து மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்
இதில் வெள்ளாடு, செம்மறியாடு, கோழி உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வந்திருந்தன தீபாவளிக்கு ஒரு சில நாட்களில் உள்ள நிலையில் கணிசமாக ஒரு ஆட்டிற்கு விலை ஆயிரம் முதல் 2000 வரை உயர்ந்துள்ளது இதனால் ஆட்டின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் ஆடுகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இருந்தாலும் ஆறாயிரத்திற்கு விற்பனை ஆகும் ஆடுகள் 8000 முதல் 8, 500 வரை விற்பனையாகி வருகிறது இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு கோடிக்கு மேல் ஆடு கோழி வியாபாரமான தின வியாபாரிகள் தெரிவித்தனர்