தனியார்பேருந்துமோதி விபத்துஅதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

75பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து வாழப்பாடி வழியாக, சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த போது வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் பிரிவு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை வெள்ளாள குண்டம் இணைப்பு சாலை வழியாக வந்த மற்றொரு தனியார் பேருந்து சாலையை கடக்க முயன்ற போது சேலம் சென்ற தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் இரு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர் ஆகியோர் காயம் அடைந்தனர். ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்தியதால், 50க்கும் மேற்பட்ட பயணிகளும் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்கள். இந்த விபத்தால், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்பளன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இரண்டு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி