சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் வழியாக, சேலம் - விருத்தாச்சலம் அகல ரயில் பாதை (மின்பாதை) செல்கிறது.
இங்கு, தெற்கு ரயில்வே மற்றும் பேரிடர் மீட்பு குழு சார்பில் ரயில் விபத்து, ரயில் தடம் புரண்டது குறித்து போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இவற்றை சேலம் கோட்ட அலுவலர் பகத்சிங் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மின் வழிப்பாதை வழியாக வரும் ரயில் தடம் புரளுதல், மற்றொரு ரயில் மீது மோதி விபத்து ஏற்படுதல், ரயிலில் தீ விபத்து போன்றவை குறித்து தத்ரூபமாக ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, ரயில் விபத்துகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மருத்துவக் குழுவினர் பேரிடர் மீட்பு குழுவினர் தனி ரயிலில் வந்து மீட்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து ரயில் பாதை கடந்து செல்லுதல், ஆளில்லா ரயில்வே கேட் உள்ளிட்ட இடங்களில் ரயில் பாதை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.