ராஜஸ்தான்: தௌசாவில் திருமண மண்டபத்திற்கு வெளியே பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அங்கு தனது காரை மாப்பிளை வீட்டாரோடு வந்தவர் பார்க்கிங் செய்ய முயன்றுள்ளார். இதனால், அவருக்கும் பெண் வீட்டு ஆட்களுக்கும் 7 பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த நபர் கோபத்தில் முன்னால் நின்ற 7 பேர் மீதும் காரை ஏற்றிவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 7 பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.