ஏரிவளவுமலைப்பாதையில் பால்டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

55பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஹட்சன் பால் டைரிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அந்த பால் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் பல்வேறு பகுதியில் இருந்து பால் கொள்முதல் கிடங்கிலிருந்து நாள்தோறும் சுமார் 10, 000 லிட்டர் பால் தனியாருக்கு சொந்தமான ஹட்சன் பால் டைரி நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் பால் லாரியை தலைவாசல் அருகே உள்ள ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஓட்டுனர் கருமந்துறை மலையிலிருந்து வழக்கம்போல் 10ஆயிரம் லிட்டர் பாலை லாரியில் ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவனத்திற்கு மலைப்பாதையில் கொண்டு செல்லும்போது ஏரி வளவு கீரைக்காடு என்ற கொண்டை ஊசி மலைப்பகுதியில் சென்றபோது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த பத்தாயிரம் லிட்டர் பால் கீழே கொட்டி சேதமானது மேலும் காயமடைந்த ஓட்டுனர் சங்கர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்த்தினார். அவ்வழியாக வந்த பொதுமக்கள் சங்கரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு முதல் சிகிச்சை உதவிக்காக அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி