பெண்மருத்துவருக்கு 3 ஆண்டு சிறை வாழப்பாடி நீதிமன்றம் உத்தரவு

58பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ராதிகா, கடந்த 2018ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் (நிகாரிகா) ஆய்வு செய்தார்.

அப்போது அந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் சொல்லி வந்ததும், கர்பிணிகள் பரிசோதனை குறித்து உரிய ஆவணங்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமை மருத்துவர் ராதிகா மற்றும் மருத்துவ குழுவினர் அளித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, நேற்று
வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சன்மதி, பாலினம் குறித்து தகவல் கூறிய வழக்கில்
மருத்துவர் செல்வம்பாளுக்கு
மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி