சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வெள்ளியம் பட்டியை பகுதியை சேர்ந்த பீரோ பட்டறை உரிமையாளர் சரவணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்தனர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரின் உடல் பரிசோதனை செய்ய நேற்று இரவு 8: 00 மணிக்கு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் செந் தில்குமார் ஒரு மருத்துவர் மட்டும் உள்ளதாகவும் சிறிது நேரம் காத்திருக்கும் படி போலீசாரிடம் சொன்னதாக கூறப்படுகிறது இந்நிலையில் போலீசார் கொலை குற்றவாளி எனவும் உடனடியாக பரிசோதனை செய்து அனுப்பும்படி கேட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த அரசு மருத்துவர் செந்தில்குமாருக்கும் போலீசாருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தள்ளுமுள்ளு அக மாறிய நிலையில் மருத்துவரை போலீசார் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி வைரல்.