ஏத்தாப்பூர் முத்து மலை முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா

79பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ளது. இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. காலையில் கந்த சஷ்டி விழா நடைபெற்ற நிலையில் மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சிநடைபெற்றது. இதில்சூரர்கள் மற்றும் தேவர்கள் வேடமணிந்து வந்து சூரனை வதம் செய்வதை தத்துவமாக செய்தனர். பின்னர் முத்துமலை முருகன் கோவிலை சுற்றி வலம் வளம் வந்தார். மேலும் மூலவர் முத்துமலை முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி