சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் செல்போன் திருடியவர் கைது
தர்மபுரியை சேர்ந்தவர் சாந்தி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க சென்றார். பின்னர் அவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் அயர்ந்து தூங்கினார். அவர் கண்விழித்து பார்த்தபோது, அவரது செல்போனை காணவில்லை. இதுகுறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அரசு ஆஸ்பத்திரியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சமையல் தொழிலாளி ஜான் ஜெரால்ட் (வயது 49) என்பது தெரியவந்தது. இவர், சேலத்தில் தங்கி பகலில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.