நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி, அதையும் தாண்டி பல நன்மைகளைத் தரக்கூடியது. நாமக்கட்டி உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு நல்ல தீர்வாகும். காலை, மாலை இரண்டு வேளையும் நாமக்கட்டியைத் தண்ணீரில் குழைத்து வயிற்றின் மேல் தடவி வந்தால் உடல் சூடு குறையும். இரவு தூங்கச் செல்வதற்கு முன் நாமக்கட்டியைத் தண்ணீரில் குழைத்து கட்டி, வீக்கம் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.