௯டமலைஆசிரியர்தாக்கியதாகபள்ளிமாணவன்மருத்துவமனையில்அனுமதி

72பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார், இவரது மகன் பரணி (15) இவர் கூடமலை கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பரணி நேற்று காலை பள்ளிக்குச் சென்றபோது பள்ளி சீருடை அணியாமல் மாற்று உடையில் சென்றுள்ளார். இதை கவனித்த ஆசிரியர் மணி என்பவர் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது, இதை அறிந்த மாணவனின் பெற்றோர் பரணியை கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி