சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் ஆதிதிராவிட மக்களுக்கு 4. 25 ஏக்கர் அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், அரசு அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புங்கவாடி பகுதிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் சென்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் வருவதை அறிந்த மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.