கெங்கவல்லி ஜாக்டோ ஜியோ10அம்சகோரிக்கைகளை ஆர்பாட்டம்.

74பார்த்தது
தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 21 மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டு வருவதை உடனடியாக வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் நேற்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன கலந்து கொண்டனர். தொடர்ந்து தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி