கெங்கவல்லி: 2 கைத்தடிகளால் பாஜக ஆட்சி எம். பி. கிரிராஜன் பேச்சு

65பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுக சார்பில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் திமுக மாநில சட்ட திட்ட குழு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கிரிராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசும்போது: நான் ஒரு இடங்களை கொடுத்தால் இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என உறுதி பூண்டு பணியாற்றினார்கள். ஆனால் நம்முடைய அதிர்ஷ்டம் அவர்களுடைய துரதிஷ்டம், முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இரண்டே இரண்டு கைத்தடிகளால் இந்த ஆட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒன்று நிதீஷ்குமார், மற்றொன்று சந்திரபாபு நாயுடு. இன்றைக்கு பாராளுமன்றத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் வேறு எந்தக் கட்சிக்கும் எந்த மாநிலத்துக்கும் கிடையாது.

தேர்தல் ஆணையம் என்பது இன்றைக்கு நடந்த டெல்லி தேர்தலை பார்த்திருப்பீர்கள். அதில் எத்தனை தில்லுமுல்லுகள் நடைபெற்றது என்பது தெரியும் என அவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென பள்ளிவாசலில் இருந்து இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்தி பின்னர் தொடர்ந்து பேசினார்.

தொடர்புடைய செய்தி