சேலம் மாவட்டம், கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நடுவலூர், தெடாவூர், ஒதியத்தூர், கடம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் புகை மண்டலம் போல் காட்சியளிக்கும் சூழலும் உள்ளது. கடும் பனிப்பொழிவால் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.