சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் 30 (அருந்ததியர்) குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி எந்தவித முன்னறிவிப்பு இன்றி கடந்த மாதம் ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை எடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க வீடு வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.