வலசக்கல்பட்டி ஏரி தடுப்பணைமுட்புதர்களை அகற்ற கோரிக்கை

83பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியின் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு ஏரி தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வலசக்கல்பட்டி ஏரியின் தடுப்பணை பகுதியில் அதிக அளவில் முட்புதர்களாக காணப்பட்டு வருவதால் பாசனத்திற்குச் செல்லும் தண்ணீர் முறையாகச் செல்ல முடியாமல் அது வீணாகி வருகிறது. இதனால் அரசு அதிகாரிகளும் பொதுப்பணித் துறையும் வலசக்கல்பட்டி ஏரி தடுப்பணை பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி