அந்தியூரில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கொமராயனூரை சேர்ந்த வீரப்பன் மனைவி வேலம்மாள் (69). விவசாயி. இவர், கடந்த சில வருடங்களாக மூட்டு வலியால் அவதிபட்டு வந்தார். வேலம்மாள் கடந்த 20-ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலம்மாள் நேற்று (அக்.22) உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.