ஈரோடு: கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்கள் விற்பனை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட நசியனூர், பெரிய வாய்க்கால் மேடு பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாய்க்கால் கரையில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள், பெருந்துறையை அடுத்துள்ள ஸ்லேட்டர் நகர் பகுதியை சேர்ந்த விமல் (24), பெருந்துறை, சென்னிமலை ரோடு, பவர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை 400 கிராம் அளவில் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 2, 800 மதிப்பிலான கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.