சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் ரவி, இவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட ரவி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றும், மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலயத்திற்கு நடை பயணம் மேற்கொண்டார்.
நடை பயணத்தை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆத்தூரில் தொடங்கி வைத்தார். 130 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடை பயணத்தில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு நடை பயணம் மேற்கொண்டார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.