ஆத்தூர் மாவட்ட சிறை விவகாரம்; கியூ பிரிவு எஸ். ஐ. க்கு நோட்டீஸ்

81பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதி பகுதியில் மாவட்ட சிறை உள்ளது. இதில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக 65 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்கு வந்த கியூ பிரிவு எஸ்ஐ தியாகராஜன் என்பவர் தனது அடையாள அட்டையை காண்பித்து சிறைக்குள் சென்று சிறை வளாகத்தை புகைப்படம் எடுத்துள்ளார். 

சிறை கண்காணிப்பாளர் வைஜெயந்தி வெளியில் சென்ற நிலையில் பணியில் முதல் நிலை காவலர் சத்தியமூர்த்தி என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் கியூ பிரிவு போலீசாரை சிறைக்குள் அனுமதித்ததாக விளக்கம் கேட்டு முதல் நிலை காவலர் சத்தியமூர்த்திக்கு சேலம் மாவட்ட சிறை துறை எஸ்பி வினோத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி