ஆத்தூர் மாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

68பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர் திருக் கோயில் உள்ளது. இங்கு நேற்று மாசி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக அமைதிக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் காலபைரவர் பதினாறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில் காலபைரவர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். பல்வேறு வகையான பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி