மத்திய அரசு நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி சமஸ்கிருதம் அந்த நாட்டின் தாய்மொழி உள்ளிட்ட முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்தது, இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர்களும் சமூக ஆர்வலர்களும் ஹிந்தி திணிப்பு சமஸ்கிருதத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது ஆனால் மத்திய கல்வித் துறை அமைச்சர் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தாவிட்டால் நிதி மத்திய அரசு வழங்காது என அறிவித்தார் இதை மேலும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது,
இதைக் கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் திராவிட கழகத்தின் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது மத்திய கல்வித்துறை அமைச்சர் தமிழகத்திற்கு நிதி வழங்க முடியாது என்றும் அறிவிப்பு செய்ததை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர், இதில்
திராவிட கழகத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.