சேலம் மாவட்டம் தலைவாசல் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றி தலைவாசல் வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சார்பு அணி ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு 77வது அம்மாவின் பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும் என தெரிவித்தார். தலைவாசல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி மற்றும் சார்பு அணி ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.